வெள்ளி, 2 ஜூலை, 2010

சவரத் தொழில் செய்யும் இளம்பெண் - 2.7.10 தினத்தந்தி செய்தி


20 வயதான ஒரு இளம்பெண் வறுமையின் காரணமாக படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு சவரத் தொழிலில் ஈடுபட்டு தனது தாயை காப்பாற்றி வருகிறார். அவர் பெயர் தேவிபாலா. தர்மபுரி மாவட்டம் பாலகோடு அருகில் உள்ள அமானிமல்லபுரத்தை சேர்ந்தவர். இவரது தந்தை கிருஷ்ணன் அவரது சகோதரரின் முடி திருத்தும் கடையில் வேலை பார்த்து வந்த போது தேவி பாலா பள்ளிப் படிப்பு படித்து வந்தார். சில நேரங்களில் அந்த முடி திருத்தும் கடைக்கு சென்று தந்தைக்கு உதவியாக இருந்து வந்தார். அப்போது சவரத் தொழிலையும் கற்றுக் கொண்டார். இந்நிலையில் திடீரென அவரது தந்தை கிருஷ்ணன் இறந்து விட்டார். தேவிபாலாவின் உடன் பிறந்த இரு சகோதரர்களும் திருமணம் செய்து கொண்டு தனி குடித்தனம் சென்று விட்டனர். இந்த நிலையில் தேவிபாலா தனது தாய் கமலாவை காப்பாற்ற படிப்பை நிறுத்திவிட்டு தனது தந்தையின் தொழிலான சவரத் தொழிலில் ஈடுபடத் தொடங்கினர். கடந்த 8 ஆண்டுகளாக இந்த தொழிலை செய்து வரும் தேவிபாலா கிடைக்கும் வருமானத்தை வைத்து தனது தாயை கவனித்து வருகிறார். 12 வயது முதலே வயிற்று பிழைப்புக்காக கையில் கத்தி, கத்தரிக்கோலுடன் வாலிபர்கள் முதல் பெரியவர்கள் வரை பலருக்கும் முகச் சவரம் மற்றும் முடி திருத்தும் பணியில் ஈடுபட்டு வருகிறார். இது குறித்து தேவிபாலா கூறுகையில், " வறுமையின் காரணமாக எனது தந்தையின் தொழிலான சவரத்தொழிலை செய்து வருகிறேன். விரும்பி இத் தொழிலை செய்யவில்லை. 8 ஆண்டுகளாக செய்து வருகிறேன். படிக்க வழி இல்லை. பிழைக்க வருமானம் இல்லை. இந்த நிலையில் தாயை காப்பாற்ற தந்தையின் தொழிலை செய்து வருகிறேன். இந்த தொழிலை முழுமையாக ஏற்று செய்யவில்லை. வேறு வழியின்று செய்கிறேன்" என்று கூறினார்.

6 கருத்துகள்:

Shalini சொன்னது…

அக்கா ஆரம்ப பதிப்பே அசத்தல் பதிப்பு.. சூப்பரு...

லிவிங் ஸ்மைல் சொன்னது…

பதிவு உலகத்திற்கு வருக வருக என வாழ்த்துகிறேன். (நான் அப்பிடியே மூட்டைய கட்டிட்டு கெளம்பிற்றேன்.டா டா..)

பெயரில்லா சொன்னது…

உழைத்துப் பிழைக்கும் எல்லா தொழிலும் உயர்வானதே என்றாலும், ஆணுக்கு நிகராய் ஒரு பெண் தொழில் செய்வது மகிழ்வே என்றாலும்,

"கொடிது கொடிது வறுமை கொடிது....அதனினும் கொடிது இளமையில் வறுமை...."

என்பதற்கேற்ப தேவிபாலாவின் நிலையும் கொடிதுதான்.

நல்ல பகிர்வு. வாழ்த்துக்கள்.

கீதா இளங்கோவன் சொன்னது…

நன்றி ஷாலு.

கீதா இளங்கோவன் சொன்னது…

`பதிவு உலகத்திற்கு வருக வருக என வாழ்த்துகிறேன். (நான் அப்பிடியே மூட்டைய கட்டிட்டு கெளம்பிற்றேன்.டா டா..'

வாழ்த்துக்கு நன்றி ஸ்மைலி. டாட்டா சொல்ல நாங்க விட்டுடுவோமா. என்ன இருந்தாலும் நீங்க சீனியர் ஆச்சே. புதுசா வர்ற சின்ன புள்ளைங்கள வாழ்த்துங்க மேடம்.

கீதா இளங்கோவன் சொன்னது…

வாழ்த்துக்கு நன்றி தோழர்.
//"கொடிது கொடிது வறுமை கொடிது....அதனினும் கொடிது இளமையில் வறுமை...."
என்பதற்கேற்ப தேவிபாலாவின் நிலையும் கொடிதுதான்.//
உண்மை நண்பரே. படிக்க ஆசைப்படும் தேவிபாலாவிற்கு சமுதாயம் எந்த வாய்ப்பையும் தரவில்லை. பெண் கல்விக்கு அவ்வளவுதான் முக்கியத்துவம். வறுமையை வென்றெடுக்கவும் தாயை காப்பாற்றவும் சவரத் தொழில் உதவியது. நிர்ப்பந்தம் காரணமாக, அவர் தன்னை அறியாமல் `பெண்ணுக்கான தொழில் கட்டுப்பாடுகளையும்' உடைத்துள்ளார்.

கருத்துரையிடுக